முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க திட்டம்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

Date:

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் நாட்டுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 500 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் முச்சக்கரவண்டி தொழிற்துறையை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடதக்கது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...