தற்போதைய அரசாங்கம் கட்டார் நாட்டிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றார்கள் ஆனால் இந்த அரசாங்கம் முஸ்லிம்களை எவ்வாறு நடத்தினார்கள் என்று ஞாபகமிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சண ராஜகருணா தெரிவித்தார்.
இன்று (29) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, இந்த நாட்டில் எத்தனை தடவைகள் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன. உணவுப்பொதிகள், பஸ் கட்டணம் ரயில் கட்டணம், மரக்கறி, மக்கள் பயன்படுத்தும் அனைத்தையும் விலைகளை அதிகரித்து இந்த நாட்டில் வாழ முடியாமலாக்குகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் கொரோனா தொற்று காலப்பகுதியில் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை முஸ்லிம் நாடுகள் பலவற்றின் கோரிக்கைகளையும் மீறி எரிப்பதற்கு தீர்மானித்தார்கள் என்று
மேலும், இனவாதத்தை தூண்டுவதற்காகவே அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டது. இது போன்றே டாக்டர் ஷாபி விவகாரமும் இருந்தது.
மற்றும் ‘வன்த பெதி, வன்த கொத்து’ என்று கூறினார்கள். இந்த எரிபொருளுக்கும் ‘வன்த எரிபொருள்’ என்று கூறாமல் இருக்கமாட்டார்களா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
அந்த அரபு நாடுகளுக்கும் இங்குள்ள முஸ்லிம்களுக்கு செய்த விடயங்கள் ஞாபகத்தில் இருக்கும் கொவிட் காலங்களில் முஸ்லிம்களின் உடல்களை எரித்தனர்.
அப்போது முஸ்லிம் நாடுகள் எவ்வளவோ வலியுறுத்தியும் நாட்டில் இனவாதத்தை தூண்டினார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்