‘யாழ்ப்பாணத்திற்கான ஒரு புகையிரத பயண செலவு ரூ.300,000’:ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு குறித்து பந்துல விளக்கம்!

Date:

ரயில் கட்டணத்தை பேருந்து கட்டணத்தில் பாதியாக உயர்த்துவதற்கான பொதுவான கொள்கை வகுக்க வேண்டுமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (8) பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, அவ்வாறான பொதுவான கொள்கை வகுக்கப்படாவிட்டால், ஓடும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேரத்தில் அதிவேக ரயிலை இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிபொருளுக்காக மட்டும் 1.3 மில்லியன் ரூபாய் செலவாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி யாழ்ப்பாணத்திற்கான ஒரு புகையிரத பயணத்தினால் 300,000 ரூபா நட்டம் ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வால் ரயில் கட்டணமும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...