முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கின் தீர்ப்பு இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போது தனது தவறை ரஞ்சன் ராமசாயக்க ஏற்றுக்கொண்டார்.
இதன்படி, குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உச்ச நீதிமன்றினால் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வேறு வழக்கொன்றில் ரஞ்சன் 4 வருடங்கள் சிறைத்தணடனையை அனுபவித்து வருகின்றார்.