போராட்டத்தின் விளைவு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் மிகவும் சுபீட்சமான காலம் உதயமாகியுள்ளதாக கூறுபவர்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூற வேண்டும் என விஜித ஹேரத் தெரிவித்தார்.
தற்போதுள்ள எரிபொருளை குறிப்பிட்ட ரேஷன் முறைக்கு விநியோகிக்கும் முறைமை இருக்க வேண்டும் எனவும், எண்ணெய் விநியோகிப்பதற்கு நியாயமான முறைமை இருக்க வேண்டும் எனவும் ஹேரத் தெரிவித்தார்.