லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

வீட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதித பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அடுத்த நான்கு மாதங்களுக்கு ஓமானில் உள்ள நீண்ட கால விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், முதலில் தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்த முதித பீரிஸ், விநியோகஸ்தர் 6000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு மட்டுமே விலையை குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஓமானில் உள்ள விநியோகஸ்தர் தாய்லாந்தின் விநியோகஸ்தரை விட சற்றே அதிக விலையை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆனால் குறைந்தபட்சம் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஆர்டருக்கு, அவர்கள் 03 முதல் 04 மாதங்களுக்கு எரிவாயுவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய எரிவாயு தேவையை கருத்தில் கொண்டு ஓமானில் உள்ள விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...