லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ லங்காவில் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், 2019 இல் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து தலைவர் பதவியில் இருந்து விஜித ஹேரத் இராஜினாமா செய்ததை அடுத்து அவர் நியமிக்கப்பட்டார்.
லிட்ரோ தொழிற்சங்கம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முதிதவை தலைவராக நியமித்தமை பொருத்தமானது என தெரிவித்தது.
தற்போது ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று தலைவர்களை லிட்ரோ பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.