லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்து! இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலில் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று பாதையை விட்டு விழகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கந்தளாய் பொலிஸார் தெரிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(4) அதிகாலை 3.00மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து தம்புள்ளை பகுதிக்குச் சென்ற லொறியொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றினையும் மோதி வீடொன்றினுள் புகுந்துள்ளதாகவும் இதனால் வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் நித்திரை கலக்கமும்,அதிக வேகமுமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு,விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...