வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை மீண்டும் விவசாய மக்களுக்கு வழங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வன திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வயல் நிலங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் கமநல ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.
வனப்பாதுகாப்பிற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை இம்முறை மற்றும் எதிர்வரும் பருவ காலத்தில் விவசாயம் செய்யக்கூடிய வகையில் விவசாயிகளுக்கு வழங்குவதை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.