நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீட்டு சமையல் எரிவாயுவிற்கு மாற்றாக விறகுக்கு மாறியுள்ளனர்.
அதற்கமைய இந்த இடைக்கால முறைமையை கையாள்வதில் போதிய அறிவு இல்லாததால் மக்களிடையே தீக்காயங்கள் அதிகரித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தேசிய வைத்தியசாலையின் தகவலின்படி, தீக்காயம் அடைந்தவர்களில் கணிசமான அதிகரிப்பு நாடு முழுவதிலும் இருந்து பதிவாகியுள்ளது.
விறகு அடுப்புகளுக்கு தீ வைக்கும் போது மண்ணெண்ணெய்க்கு மாற்றாக பெட்ரோலை பயன்படுத்தியதால் ஏற்பட்ட தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோலை விட மண்ணெண்ணெய் குறைந்த ஆவியாகும். அதன் மேற்பரப்புக்கு அருகில் எரியக்கூடிய நீராவியை உருவாக்கும் வெப்பநிலை 38° (°C) செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.
அதேசமயம் பெட்ரோலின் வெப்பநிலை −40 (°C) ஆகக் குறைவாக இருக்கும். மண்ணெண்ணையை சேமிப்பதற்கும் கையாளுவதற்கும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான எரிபொருளாக ஆக்குகிறது.
பெட்ரோலின் பற்றாக்குறை மற்றும் அபாயகரமான தன்மை காரணமாக மாற்றாக விறகு அடுப்புக்கு பெட்ரோலை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கும் அதே வேளையில் மண்ணெண்ணெய் பயன்படுத்துமாறு பொதுமக்களை அதிகாரிகள் ஊக்குவித்துள்ளனர்.