பன்னிபிட்டிய வியத்புர வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளில் இருந்து கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கி தற்காலிக அடிப்படையில் வீடுகளை ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த எம்.பி.க்கள் பணத்தின் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு இணங்கினால், அத்தகைய வீடுகளை கொள்வனவு செய்வதற்கும், விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையை பொது திறைசேரிக்கு திருப்பி செலுத்துவதற்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை முன்மொழிந்துள்ளது.
இதேவேளை பன்னிபிட்டிய வியத்புர திட்டத்தில் 200 வீடுகள் நடுத்தர வர்க்கத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மொத்த திட்டமானது 500 வீட்டு அலகுகளைக் கொண்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களாக 101 வீடுகளை ஒதுக்குவதற்கு 2018 இல் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆண்டு 101 வீட்டுத் தொகுதிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவுக்காக பொது திறைசேரி 1,795.3 மில்லியன் ரூபாவை வழங்கும் என்றும் அமைச்சரவைப் பத்திரம் முன்மொழிகிறது.
ஒப்பந்ததாரர்களின் செலவினங்களுக்காக 897.67 மில்லியன் ரூபாவில் 50 சதவீதத்தை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு பொது திறைசேரி முன்மொழிந்துள்ளது.