ஹோமாகம, மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு வயது மகள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹோமாகம, மாகம்மன பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.ஏ.லசந்த புத்திக ரணசிங்க (வயது 47) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தனது மனைவி (38), மூத்த மகள் (19) மற்றும் ஆறு வயது மகளுடன் இரண்டு மாடி வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அறையில் தங்கியிருந்த போது நேற்று (26) இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் தம்பதியருக்கும் அவர்களது மூத்த மகளுக்கும் பலத்த தீக்காயங்களும், ஆறு வயது மகள் லேசான காயமும் அடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிகக்ப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் சரியாக கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பிரதேசவாசிகளால் தீ அணைக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த 6 பேர் பொரளை சிறுவர் வைத்தியசாலையிலும், ஏனைய மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.47 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.