லிட்ரோவினால் இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 2500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்தன.
இந்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர்கள் இறக்கப்பட்ட பின்னர் எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் மீண்டும் தொடங்க முடியும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதேவேளை மூன்று மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த லாஃப் சமையல் எரிவாயுவின் உள்நாட்டு விநியோகம் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் இலங்கை வந்துள்ளதுடன், பரிசோதனை நிறைவடைந்தவுடன் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.