சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் தற்கொலை!

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை தயா வீதிக்கருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

22 வயதான குறித்த இராணுவ சிப்பாய் தனது கடமை நேர துப்பாக்கியை உபயோகித்து தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிப்பாய், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்கு செல்லும் ஒழுங்கையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...