40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம்!

Date:

40,000 மெட்ரிக் டன் பெற்றோலுடன் நேற்று நாட்டை வந்தடையவிருந்த கப்பல், மேலும் தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விநியோக நிறுவனம் இது தொடர்பில் பெற்றோலிற கூட்டுதாபனத்திற்கு அறிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் தாங்கிய குறித்த கப்பல், நேற்று முன்தினம் நாட்டை வந்தடைய இருந்தது.

எனினும், அந்தக் கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடையும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த கப்பல் இலங்கையை வந்தடையும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதி வெள்ளிக்கிழமைகளில், சுகாதார சேவை பணிக்குழாமினருக்காக தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், வைத்தியர், தாதியர், ஒளடதவியலாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணிக்குழாமினர், நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

வைத்தியர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொடுக்க வினைத்திறனான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் நேற்று வலியுறுத்தி இருந்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...