8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பு!

Date:

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமது பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயார் என இடைக்கால மருத்துவ சேவைகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல மருத்துவமனைகளின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அனைத்து தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களையும் வாரத்தில் 03 நாட்கள் மாத்திரம் இயக்கும் தீர்மானத்திற்கு எதிராக தபால் ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களையும் தொழில் நடவடிக்கையை இடைநிறுத்தி பணிக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...