கிர்னே அமெரிக்கன் பல்கலைக்கழகம் தமக்கு வழங்கிய கௌரவத்திற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழகத்தினால் ரவூப் ஹக்கீமுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘இந்தப்பட்டத்திற்கு தான் தகுதியானவர் என்று கருதுவதையிட்டு மிகவும் தாழ்மையாக உணர்கிறேன் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனக்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அது கலாநிதிக்கான சரியான படிப்பை முடித்த பிறகு பெறப்படவில்லை எனவு ரவூப் ஹக்கீம் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.