டீசல் தட்டுப்பாடு காரணமாக தடைப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து டீசல் விநியோகம் இன்று (8) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
தனியார் பேருந்துகள், பாடசாலை பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு டிப்போக்களில் டீசல் கிடைக்கிறது.
இதேவேளை நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் வழமைப் போன்று டீசல் மற்றும் பெற்றோல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக டீசல் மற்றும் பெட்ரோல் குறைந்த அளவிலேயே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதுடன் நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஏற்கனவே நீண்ட வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வரவுள்ள எரிபொருள் தாங்கிய கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.