இலங்கையில் அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தைத் தொடங்கியது உலக உணவுத் திட்டம்!

Date:

இலங்கையில் உணவு நெருக்கடி அதிகரித்துள்ளதை அடுத்து உலக உணவுத் திட்டம்  அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்படி நேற்று (16) கொழும்பு மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவு வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டன.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருட்களைப் பெற முடியாத அபாயத்தில் உள்ள சுமார் 3 மில்லியன் இலங்கையர்களுக்கு உணவு வவுச்சர், உணவு அல்லது பணமாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ரூ.15,000 மதிப்புள்ள உலக உணவுத் திட்டத்தின் மாதாந்த வவுச்சர், 2,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான உணவைப் பெற உதவும்.

அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையால் ஏழைக் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதற்குப் போராடி வருவதாகவும், இலங்கையின் 22 சதவீதமான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக உதவி தேவைப்படுவதாகவும் உலக உணவுத் திட்டம்  தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம்  குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவைக் கொண்டிருப்பது கடினம் என்று கண்டறிந்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, 86 சதவீத குடும்பங்கள் தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்கின்றன, சத்தான உணவை உட்கொள்வதைக் குறைக்கின்றன அல்லது தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க உணவைத் தவிர்க்கின்றன.

“கர்ப்பிணி தாய்மார்களுக்கு தினமும் சத்தான உணவு கிடைக்க வேண்டும், ஆனால் ஏழைக் குடும்பங்கள் அதைச் செய்வது கடினம்.

உணவைத் தவிர்ப்பது கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது, ”என்று ஆசியா மற்றும் பசிபிக் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் ஆன்டியா வெப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...