உணவு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, மாவனல்லையில் இலவச மரக்கன்றுகள், மரவள்ளித்தடிகள் வழங்கும் நிகழ்வு!

Date:

நாடு எதிர் நோக்கியுள்ள உணவுப் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை ஆரம்பித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக 5000 அடி மரவள்ளிக் கிழங்குத் தடிகள் மற்றும் சுமார் 10,000 (1000 பக்கற்றுகள்) மிளகாய், கத்தரிக் கன்றுகள் இலவசமாக வழங்கும் வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவனல்லை பிரதேச செயலக செயலாளர் வி.ஓ.எல்.எஸ். ரத்னசேகர கலந்து கொண்டார்.

மேலும் கிராம உத்தியோகத்தர், கமநல உத்தியோத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தவர்கள் மற்றும் மாவனல்லைப் பொலிஸ் சமூக பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு உதவி செய்த மற்றும் ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைவருக்கும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை, இந்நிகழ்வில் 30 பலா மரக்கன்றுகளும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...