உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!

Date:

இலங்கையிலுள்ள குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் இலங்கைக் குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மலிவு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட உணவை உண்பதாகவும், இது ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு போகங்களிலும் நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய மதிப்பிறக்கம் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20% த்தினாலும் அதிகரித்துள்ளதாகவும், வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6% த்தினாலும் அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...