‘உரம் வழங்குவதற்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’

Date:

எதிர்வரும் நெல் விதைப்பதற்கான பருவத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க முடியும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார  நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே இவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முழு நெற்பயிர்க்கும் உரம் வழங்குவதற்கு 220 மில்லியன் டொலர்கள் செலவாகும் என அமைச்சின் செயலாளர்  தெரிவித்தார்.

ஏற்கனவே 110 மில்லியன் ரூபா பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயக பருவத்திற்கான முழுமையான உரத்தை வழங்க முடியும் என செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் மகா பருவத்தில் 800,000 ஹெக்டேயர் நெற்செய்கையை மேற்கொள்ள முடிந்தால் நாட்டின் 09 மாத நெல் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளில் ஒன்று இயற்கை விவசாயம்.

இவ்வாறான செயற்பாடு பாரியளவில் மேற்கொள்ளப்படும் போது ஏற்படும் நிலைமைகள் குறித்து விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, உரம் இல்லாத போதிலும், பருவத்தில் நெற்செய்கை தொடர்கிறது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தரவுகளின்படி 75 வீதமான நெற்பயிர்கள் உழவு செய்யப்பட்டுள்ளன.

65 சதவீத விதைப்பு நிறைவடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், அவர்களுக்கு உரம் எப்போது கிடைக்கும் என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு அறிவிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...