எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் அனைத்து தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடாது: கெமுனு விஜேரத்ன!

Date:

எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் அனைத்து தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இந்தவாரம் பஸ்களுக்கு டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்காவிட்டால், திங்கட்கிழமையில் முதல் தனியார் பஸ் சேவை முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்ததுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பஸ் தொழிற்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மீண்டும் பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பஸ்களுக்கு டீசல் பெறுவதற்கு பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மூலம் எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...

பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற...

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை...