ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று (13) தொடக்கம் ஜூலை 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் இலங்கை நேரப்படி மாலை 4.20 மணியளவில் அவர் உரையாற்ற உள்ளார்.
மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கு அமைவாக அமைச்சர் பீரிஸின் உரை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சின்ஜியாங், சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளில் விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இதேவேளை மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் வருடாந்த அறிக்கையுடன் அமர்வு ஆரம்பமாகும்.