சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் காணொளி காட்சிகள் பரப்பப்பட்டதையடுத்து, மூன்று எரிபொருள் பாரவூர்திகளின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகியவை விசாரணைகளை நடத்தி வருகின்றன எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காட்சிகளில் எரிபொருள் போக்குவரத்து லொறிகள் சட்டவிரோதமாக எரிபொருளை இறக்குவதைக் காட்டியது.
இதேவேளை சட்டவிரோத செயற்பாடுகளை கவனத்திற்கு கொண்டு வந்த அனைவருக்கும் அமைச்சர் விஜேசேகர நன்றி தெரிவித்தார்.