‘தம்மிக வீட்டுக்குச் செல்லுங்கள்’: வீட்டிற்கு வெளியே போராட்டம் வெடித்தது!

Date:

வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

‘தம்மிக வீட்டுக்குச் செல்லுங்கள்’ என கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது சூதாட்ட வணிகங்கள் குறித்து பொறுப்புக் கூறுமாறு கேட்டுக்கொண்டதுடன், அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க வெளியில் வருமாறும் அவரை அழைத்தனர்.

இதேவேளை போராட்டம் நடந்துகொண்டிருந்ததால் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு வெளியே கலகத் தடுப்புப் பொலிஸாரும் இராணுவமும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...