தம்மிக்க பெரேராவின் அமைச்சின் கீழ் ஏழு நிறுவனங்கள்: வர்த்தமானி அறிவித்தல்

Date:

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட தம்மிக்க பெரேராவின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை விவரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏழு துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அவரது அவருக்கு கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இலங்கை முதலீட்டு சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான திட்டங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட், டெக்னோ பார்க் டெவலப்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் தகவல் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தொழில்நுட்ப பூங்காக்கள் செயல்படும்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2022 ஜூன் 24 அன்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...