திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்துகள் சேவை நிறுத்தம்: :தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

Date:

தனியார் பேருந்துகளுக்கு போதியளவு டீசல் வழங்கப்படாததால், திங்கட்கிழமை (6) முதல் சேவையை நிறுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் தீர்மானம் எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இன்று ஊடகங்களிடம் கருத்துதெரிவிக்கையிலே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்ப பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும், முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாரம் பயணிகள் பேருந்துகளுக்கு டீசல் வழங்க அரசு முன்னுரிமை அளிக்காவிட்டால், திங்கட்கிழமை முதல் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் விநியோகிக்கப்படும் என தெரிவித்த போதிலும் அதற்கான உரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை டீசலை பெற்றுக்கொள்ள நீண்ட நாள் கணக்கில் வரிசைகளில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...