திருகோணமலையில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

Date:

திருகோணமலை மாவட்டத்தில் வருமானம் குறைந்த 546 வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று (02) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவெவ, மொறவெவ மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பொருளாதார ரீதியாக நலிவுற்ற நாட்கூலி வேலையை மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இப்பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் குச்சவெளிப் பிரதேச சபையைச் சார்ந்த இரு பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் இன்று வழங்கி வைத்தார்.

இவ் உலர் உணவுப் பொதி ஒன்றின் பெறுமதி ரூ 6190 ஆகும்.

மேலும் குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள போஷாக்குக் குறைவான 80 சிறுவர்களுக்கும், 89 கர்ப்பிணித் தாய்மாருக்கும் தலா 7500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மூலமாகப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மின்சார நெருக்கடி காரணமாக சிறுவர்களதுகல்விச் செயற்பாட்டை தடங்களின்றி மேற்கொள்ள 740 மின்னேற்றும் மின்விளக்கு(charger light) வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் அரச சார்பற்ற நிறுவனமான சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்.அரியரட்ணம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் J.S. அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) S.சுதாகரன், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களுடைய ஒருங்கிணைப்பு அதிகாரி A.M.S.B. அத்தநாயக்க உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...