திஸ்ஸமஹாராம பகுதியில் விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Date:

திஸ்ஸமஹாராம பிரதேச செயலகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்டார்.

இதன்போது அமைச்சர் அவ்விடத்தை விட்டு வெளியேறியதும் பிரதேச செயலகங்களுக்கு முன்பாக நின்றிருந்த மக்கள் குழுவினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவொன்றும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரவில கால்நடைச் சபைக்கு சொந்தமான பண்ணைக்கு விஜயம் செய்ய அவர் செல்லவிருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதேவேளை குறித்த இடத்திற்கு வருகை தந்த திஸ்ஸமஹாராம பொலிஸார் மற்றும் வீரவில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் கட்டுப்படுத்தப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடுமையான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...