நபிகளாரின் வரலாற்றை எழுதிய மலேசியாவைச் சேர்ந்த அஸ்மா ஹாஜி அவர்கள் இறைவனிடம் மீண்டார்!

Date:

நபிகளாரின் வரலாற்றை எழுதிய மங்கை, சகோதரி அஸ்மா ஹாஜி அப்துல் லதீஃப் இறைவனிடம் மீண்டார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அருள்புரிவானாக! அவருடைய நல்லறங்களை ஏற்றுக் கொள்வானாக! அவருக்கு சுவனத்தின் உயர்ந்த மாளிகைகளில் சேர்த்துக் கொள்வானாக! ஆமீன்.

மலேசியாவைச் சேர்ந்த அஸ்மா ஹாஜி அவர்கள் மலாய் மொழியில் நபிகளாரின் அழகிய வரலாற்றை எழுதி நற்பேறு பெற்றார். ஆசிரியை, எழுத்தாளர், அழைப்பாளர், பன்னூலாசிரியர் என்று வெவ்வேறு தளங்களில் முத்திரை பதித்தவர்.

Nazam Sirah Anbiya என்கிற பெயரில் மலாய் மொழியில் அவர் எழுதிய நூல் 2015-இல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நபிகளாரின் வரலாற்றின் ஊடே நபிகளாரின் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை உள்ளங்கவர் வகையில் சுவையாக விவரித்திருந்தார் அவர்.

குறிப்பு : நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதிலும் நபிகளாரின் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் குறித்து நூல்களை எழுதுவதிலும் ஆண்களைப் போல பெண்களும் பேரார்வமும் பற்றும் உவகையும் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த வகையில் 1980 முதல் 2008 வரை உர்தூ மொழியில் வெளியான ஸீரத் நூல்களின் பெயர்களையும் விவரங்களையும் தொகுத்து ‘ஜதீத் உர்தூ கிதாபியாத்தே ஸீரத்’ என்கிற பெயரில் தனி நூலாகவே வெளியிட்டிருக்கின்றார், ஹாஃபிஸ் முஹம்மத் ஆரிஃப் காதிஜி அவர்கள். இதில் 80 பெண்களின் பெயர்களையும் பதிவு செய்திருக்கின்றார் அவர். முப்பது ஆண்டுகளைக் கொண்ட காலகட்டத்தில் மட்டும் உர்தூ மொழியில் எண்பது பெண் எழுத்தாளர்கள் நபிகளாரின் வரலாற்றைக் குறித்து எழுதியிருக்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

உலகின் மற்ற மொழிகளில், மற்ற காலகட்டங்களில் (1980-க்கு முன்பும், 2008-க்கு பின்பும்) எத்தனை நூல்கள் எழுதப்பட்டிருக்கும், எத்தனை பெண்கள் எழுதியிருப்பார்கள் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

அது சரி, தமிழில் நபிகளாரின் வரலாற்றை எத்தனை பெண்கள் எழுதியிருக்கின்றார்கள் எனக் கேட்கின்றீர்களா? எனக்குள்ளும் அந்தக் கேள்வி எழுந்தது.

எத்தனை பெண்கள் எழுதியிருக்கின்றார்கள் என்கிற விவரம் எனக்குத் தெரியவில்லை. ஒரே ஒரு நூல் கூட ஞாபகத்துக்கு வரவில்லை.

அதே சமயம் இன்று ஏராளமான நூல்களையும் நாவல்களையும் கதைகளையும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களாக தமக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்களாய், எழுத்தாற்றல் பெற்ற ஆளுமைகளாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்ற சகோதரிகள் எஸ் பர்வீன் பானு (Parveensheik), ஹமீதா ஹாமித் (Hameeda Hamid), ஜரீனா ஜமால் (Jarina Jamal), நாஸ்ரத் ரோசி (Nasrath Rosy) போன்றோர் அன்பு நபிகளாரின் அழகிய வரலாற்றை எழுதுவதன் பக்கம் தங்களின் கவனத்தைச் செலுத்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அஷீஸ் லுத்ஃபுல்லாஹ்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...