பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக பயன்படுத்துவதற்காக 101 புதிய வீடுகளை ஒதுக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சரவைப் பத்திரத்தின்படி, பன்னிபிட்டியவிலுள்ள ‘வியத்புர’ வீடமைப்புத் திட்டத்தில் இருந்து வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து 101 அலகுகளும் தோராயமாக ரூ. 1795 மில்லியன்களாகும்.
மேலும், மதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதி பாழடைந்து வரும் நிலையில், அந்த வீடுகளுக்கு போதிய இடவசதி இல்லையெனவும் அதற்கு மாற்றாக இந்த வீட்டுத் தொகுதிகளை வழங்க அமைச்சரவைப் பத்திரம் பரிந்துரைக்கிறது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கி தற்காலிக அடிப்படையில் வீடுகளை ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.