போதைப் பொருள் பாவனை தொடர்பில் குத்பா வை அமைத்துக் கொள்ளுமாறு உலமா சபை வழிகாட்டல்!

Date:

போதைப் பொருள் பாவனை காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சீரழிவுகளுக்கும் நாளுக்கு நாள் முகங்கொடுத்து வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் போதைப் பொருட்களிலிருந்து சிறார்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குடும்பங்கள், சமூகம், தேசம் என அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

அண்மையில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவர் ஒரு சிறுமியை கொலை செய்த செய்தி நம்அனைவரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியது.

இஸ்லாம் போதைப் பொருள் பாவனையை தடைசெய்துள்ளதுடன் இதற்கு எதிராக செயற்படுவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்றும் போதித்துள்ளது.

ஆகவே, போதைப் பொருள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் இதனால் மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களையும் தெளிவுபடுத்தி எதிர்வரும் குத்பாக்களை அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

அஷ்ஷேக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்

அஷ்ஷேக் எம். அப்துல் முக்ஸித்
செயலாளர் – பிரச்சாரக் குழு

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...