பெண்கள் விவகாரம், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சகம் இன்று ஜூன் 10 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த நியமனம் வழங்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு அமைச்சுக்களில் ஒன்று வர்த்தகர் தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கள் என்பன ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் அவருக்க புதிய அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.