இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த முன்னாள் இலங்கைக்கான குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் திங்கள் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அவருக்கான அனுதாபம் தெரிவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள குவைத் தூதுவரகம் தெரிவித்துள்ளது.
தூதுரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் இலங்கை மக்கள் சார்பாக அனுதாபத்தை தெரிவிக்க விரும்புவோர் கொழும்பிலுள்ள பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள குவைத் தூதரகத்தில் தனது அனுதாபங்களை தெரிவிக்க முடியம்.
காலம்சென்ற குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி இலங்கையில் (2002-2005) வரை தூதுவராக பணியாற்றினார்.
இந்நிலையில், அவர் கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.