அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக இவரும் ஏனைய குழுவினரும் பெயரிடப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
சந்தேகநபர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஆகியோர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மஹிந்த கஹந்தகம ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநாகர சபை உறுப்பினரான சுயதொழிலாளர் சங்க சம்மேளனத்தின் தலைவராக செயற்படுபவராவார்.