மொரட்டுவ, கட்டுபெத்த பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.