லாஃப்ஸ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ. 6,850 மற்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 2,740 என லாஃப்ஸ் காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேவேளை கடந்த பல மாதங்களாக லாஃப்ஸ் எரிவாயு விநியேயாகம் இடம்பெறாத நிலையில், இன்று முதல் மீண்டும் அதன் விநியோகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.