தபால் கட்டணத்தை உடனடியாக திருத்தம் செய்யுமாறு தபால் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதற்கமைய செலவுகள் அதிகரிக்காமல் தபால் நிலையத்தை நடத்துவது கடினம் என தபால் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
காகித தட்டுப்பாடு காரணமாக, வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு தபால் துறையிலிருந்து வரும் கடிதங்களின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
நஷ்டத்தை குறைக்க, வாரத்தில் ஒரு நாள், தபால் துறையை மூட வேண்டும் என, தபால் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை தெரிவு செய்யப்பட்ட தபால் சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் தபால் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
பொது திறைசேரியில் இருந்து பணம் பெற்றாலும் தபால் சேவை நஷ்டத்தில் தான் இயங்கி வருவதுடன் நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்ட தபால் துறை தயாராகி வருகிறது.
எனினும் சுமார் ஒன்றரை வருடங்களாக தபால் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.