விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி!

Date:

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நாட்டிலுள்ள எரிபொருள் சேமிப்பக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
விமானங்களுக்கான எரிபொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே இதுவரையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் டொலர் நெருக்கடி காரணமாக நாட்டிற்கு விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
எனவே விமானங்களுக்கான எரிபொருளை நாட்டிற்கு இறக்குமதி செய்ய தனியார் துறையை அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டால், தங்கள் முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாக எரிபொருள் சேமிப்பக செயற்பாட்டாளர்கள் அமைச்சருக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கையில் உள்ள விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...