வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வீட்டுப் பணிப் பெண்களாக வெளியேறும் இலங்கைப் பெண்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21 வயதாக அரசாங்கம் திருத்தியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் சவூதி அரேபியாவை விட்டு வெளியேறுவதற்கான தற்போதைய வேலை வயது 25 ஆண்டுகள் என்றும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் 23 ஆண்டுகள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சவூதி அரேபியாவைத் தவிர மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்த பட்ச வயதெல்லையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் தொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் வயதெல்லை தொடர்பில் தீர்மானம் எடுப்பது அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்க நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபக்குழு ஜுன் 6 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
குறித்த உபகுழுவால் முன்வைக்கப்பட் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை பெண்கள் வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதற்கான ஆகக்குறைந்த வயதை 21 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.