‘ஹஜ் யாத்திரை தொடர்பாக முடிவெடுக்கும் முன் மார்க்க அறிஞர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்’: ஐம்இய்யதுல் உலமா பொதுச்செயலாளர்

Date:

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு யாத்ரீகர்களை அனுப்புவதில்லை என்ற தீர்மானம் நல்லதொரு முடிவாக இருந்தாலும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சமய அறிஞர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என ஐம்இய்யதுல் உலமா பொதுச்செயலாளர் அஷ் ஷேக் அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அகில இலங்கை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பேரவையின் நிர்வாகக் குழு மற்றும் ஆலோசனை (பத்வா) குழுவும் ஒன்று கூடி ஆராய்ந்ததன் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் மார்க்க அறிஞர்களைக் கலந்தாலோசிக்காமல் மார்க்கம் தொடர்பான விடயங்களில் உலமாக்களுடன் ஆராயாமல் மேற்கொள்ளும் தீர்மானம் அல்லாஹ்வுக்கு பொருத்தமானதாக அமையாது என்றார்.

Popular

More like this
Related

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை...

சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த பிரபல கல்வியாளர் ஜெசிமா இஸ்மாயில் அவர்களுக்கு கௌரவம்

பிரபல கல்வியாளரும் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான திருமதி ஜெஸிமா...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...