அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி: ‘ஜூலை 9 போராட்டம் வலுவாக இருக்கும்’

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களினால் நாடு முழுமையான முடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என பல மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நாளைய தினம் கொழும்பை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை 9 ஆம் திகதி முழு நாடுமுழுவதும் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 9 ஆம் திகதி பலமாக விளங்குவதற்கு ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும் கொழும்புக்கு வரவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...