அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்ய தயார் நிலையில்: தினேஷ் இன்று பதவியேற்பார்?

Date:

(File Photo)

புதிய அரசாங்கத்தின் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இன்னும் சில நிமிடங்களில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது.

பதவியேற்பு  நிகழ்வு  பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நிகழ்வுக்கு சற்றுமுன் வந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் அவரது தேசியப்பட்டியல் ஆசனம் வெற்றிடமாகியுள்ள நிலையில், அந்த வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும், முன்னைய அமைச்சரவையுடன் இணைந்து இன்று காலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட வட்டாரம் ஒன்று நேற்று ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் நேற்று இடம்பெற்ற பல கலந்துரையாடல்களின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தி னேஷ் குணவர்தன பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...