அரசாங்கம் ‘அவசரகாலம்’ பற்றி பேசுகிறது, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எதுவுமின்றி வாழும் அவசர நிலை ஏற்பட்டுள்ளது: சஜித்

Date:

நிறைவேற்று ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். நாட்டில் பெரிய அவசரநிலைகள் உள்ளன, அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை

பாராளுமன்றத்தில் இன்று (27) சற்றுமுன்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் உண்மையான அவசரநிலை குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் பொருட்படுத்தவில்லை.

பலர் வேலையிழந்து வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்த தேசத்தின் இளைஞர்கள் வேலை செய்யாமல், வருமானம் ஈட்ட வேறு வழிகளை நாடுகிறார்கள்.

குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர், மேலும் வளர்ச்சித் தடங்கல்கள் தொடர்கின்றன. குழந்தைகள் பாடசாலைகளுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது.

இதுதான் ‘எமர்ஜென்சி’, இதைத்தான் ‘எமர்ஜென்சி’ என்று சொல்ல வேண்டும். அதேசமயம், இவை அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த வாரம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்களை நடத்துமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியவர் உண்மையில் ஒரு ‘முட்டாள்’ என்று குறிப்பிட்டார்.

அமைதியாகப் போராடுபவர்களைத் தாக்குவதற்கும், உத்தரவு பிறப்பிப்பதற்கும் எந்த முட்டாள் ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறுவார் என்று எனக்குத் தெரியவில்லை.
அப்படி அறிவுரை கூறுபவர்கள் முழு முட்டாள்கள் . நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் போது அரசாங்கம் இது போன்ற அவசர முடிவுகளை எடுக்க  அனுமதிக்காது.

அதேநேரம் போராட்டக்காரர்கள் மறுநாள் வளாகத்தை விட்டு வெளியேற உறுதியளித்தனர், ஆனால் ஜனாதிபதி ஏன் போராட்ட தளத்தை தாக்க முடிவு செய்தார்.

ரணில் விக்கிரமசிங்க போன்ற அனுபவமுள்ள ஒருவர் இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதை என்னால் நம்ப முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம் பேணப்பட வேண்டுமானால், அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்

இன்று அரசாங்கம் “அவசரகாலம்” பற்றி பேசுகிறது ஆனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எதுவுமின்றி வாழும் அவசர நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அச்சுறுத்தல் மற்றும் அரச பயங்கரவாதத்தை பரப்பும் அவசர நிலை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் கூறினார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கனவு நனவாகியுள்ளதாகவும் ஆனால் 220 இலட்சம் மக்களின் கனவுகள் நசுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...