இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

Date:

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

இதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு மற்றும் அனைத்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்கள்.

பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிப்பர்.

அனைத்து மாநிலத்தின் சட்டமன்றத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம்.

எந்த கட்சிக்கும் வாக்காளர்களை நிர்பந்திக்க உரிமையில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின்படி ஜூலை 21ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஜூலை 25ஆம் திகதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார். அதற்கு முன்னதாக ஜூலை 24ஆம் திகதி ராம்நாத் கோவிந்த் தனது பதவியை இராஜினாமா செய்வார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...