தேசிய எரிபொருள் அனுமதி அட்டைக்கு அமைய, எரிபொருள் கோட்டாவை விநியோகிக்கும் மாதிரித் திட்டம் இன்று (21) முதல் மூன்று நாட்களுக்கு கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
எரிபொருள் அனுமதி அட்டை நடைமுறைக்கு வரும் வரை மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு 1,500 ரூபாவிற்கும் முச்சக்கரவண்டிக்கு 2000 ரூபாவிற்கும் ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவிற்கும் அதிகபட்சமாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.