‘பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இந்த கட்டத்தில் எவ்வாறு வந்தது மற்றும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்’ என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜூலி இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவரது செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது ‘எமது நாடுகளும் எமது மக்களும் 70 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் உள்ளனர்.
நல்லாட்சியை ஏற்றுக்கொள்ளும், மனித உரிமைகளை மதிக்கும் மற்றும் அதன் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் இலங்கையில் உறவுகள் மலர்ந்திருக்கும்’ என்று ஜூலி சுங் கூறினார்.
ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் சந்திப்பொன்றை பகிர்ந்து கொள்வது இது இரண்டாவது தடவையாகும்.
Met with President @RW_UNP at the Presidential Secretariat today. He takes office at a time when Sri Lanka stands at a crossroads. We discussed how it arrived at this point of economic & political crisis, and how we can work together to navigate toward a brighter future for all. pic.twitter.com/qCAS1TGBri
— Ambassador Julie Chung (@USAmbSL) July 27, 2022