இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்!

Date:

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இரகசிய வாக்கெடுப்பின் பின்னர் ஜூலை 20 புதன்கிழமை அன்று இலங்கை நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது, ரணில்; 134 வாக்குகள் பெற்றார். அவருடன் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமாரை 82 வாக்குகள் பெற்றார்.

ஜூலை 15ஆம் திகதி இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...