இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்!

Date:

ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த காருக்கு ‘Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஆஸ்டின் மினி மொக் காரை போன்றது.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை பயன்படுத்தி அதிக திருப்திகரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த காருக்கு ´Moksha´ என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Ideal Moksha கார் இலங்கையின் பாதைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தோற்றம், இடவசதி, பயண சொகுசு என்பவற்றின் ஊடாக இந்த தயாரிப்பின் தனித்துவத்தைக் காட்டுகின்றது.

நான்கு சக்கர மின்சார Electric Codricycle மாதிரியை சேர்ந்த Ideal Moksha மோட்டார் கார் 22.46 kWh லித்தியம் பெட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...